நெல்லுக்கு கிறைத்த நீர் வீணாவதில்லை
நெல் மணிகளாக விளைந்து செழிக்கும் !
முப்போகம் கண்டா விவசாயம் இன்று
முழுவதும் பொய்த்து ஒரு போகத்திற்கு வழியில்லை !
கர்நாடகமோ காவிரியைத் திறக்க மறுக்கிறது
கேரளமோ முல்லை பெரியாற்றில் உயர்த்திட தடுக்கிறது !
ஆந்திரமோ பாலாற்றின் குறுக்கே உயர்த்தி விட்டது
அண்டை மாநிலங்கள் வஞ்சித்து மகிழ்கின்றன !
இரண்டு வெவ்வேறு நாடுகள் கூட தண்ணீரை
இருவரும் அன்பாகப் பகிர்ந்து கொள்கின்றனர் !
ஒரே நாடான இந்தியாவில் தண்ணீர் பகிர்வதில்
ஒருவருக்கொருவர் எந்நாளும் சண்டை !
பகிர்ந்து உண்ணும் பழக்கம் புரியவில்லை
படிக்கவில்லை ஒப்பற்ற நம் திருக்குறள் !
வடக்கே ஆறுகளில் வெள்ளம் ஓடுகின்றன
தெற்கே ஆறுகள் பாலைவனம் ஆகின்றன !
ஒரே நேரத்தில் வெள்ளமும் வறட்சியும்
ஒரே நாட்டில் வருவது முறையோ சிந்திப்பீர் !
நெல்லுக்கு இறைக்க தண்ணிர் தாருங்கள்
நாளும் இரக்கத்தோடு நடந்து கொள்ளுங்கள் !
வீணாக்க கடலில் கலக்கும் தண்ணீரை
விவேகமாகப் பயன்படுத்திட முன்வாருங்கள் !
இருக்கின்ற அணைகள் இந்தியாவிற்கு போதும்
இனி புதிதாக யாரும் அணை கட்டக் கூடாது !
விவசாயிகள் தற்கொலை நாடாதிருக்க வேண்டும்
விவசாயிகள் மன மகிழ்வோடு வாழ வேண்டும் !
இமயம் முதல் குமரிவரை ஆறுகளால் இணைத்து
இந்தியாவை வளமான நாடாக மாற்றுவோம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

